புளோயிஸ்: பிரான்ஸ் சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ஜீவன்–பாலாஜி ஜோடி கோப்பை வென்றது.
பிரான்சில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. கடந்த வாரம் சுலோவாகியா தொடர் இரட்டையர் பிரிவில் கோப்பை வென்ற இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி மீண்டும் அசத்தியது. பைனலில் பிரான்சின் ரொமைன் அர்னியோடோ, ஜோனாதன் எசெரிக் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 6–4 என கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் துவக்கத்தில் 1–3 என பின்தங்கிய ஜோடி பின் 6–6 என சமன் செய்தது. இரண்டாவது செட்டை முடிவு செய்ய நடந்த ‘டை பிரேக்கரில்’ இந்திய ஜோடி 6–7 என இழந்தது.
வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘சூப்பர் டை பிரேக்கருக்கு’ சென்றது. இதில் அசத்திய இந்திய ஜோடி 10–7 என வசப்படுத்தியது. ஒரு மணி நேரம், 48 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6–4, 7–6, 10–7 என்ற செட்கணக்கில் போராடி வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றியது.