புளோயிஸ்: சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் ஜீவன்–பாலாஜி ஜோடி முன்னேறியது.
பிரான்சில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, பொலிவியாவின் போரிஸ் அரியாஸ், பெடெரிக்கோ ஜெபல்லோஸ் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை இந்திய ஜோடி 6–0 என எளிதாக வசப்படுத்தியது. தொடர்ந்து அசத்திய இந்திய ஜோடி அடுத்த செட்டை 6–3 என கைப்பற்றியது. 51 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 6–0, 6–3 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.