பர்மிங்காம்: டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி தோல்வியடைந்தது.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் லுாசி ஹிரடெக்கா ஜோடி, லாட்வியானின் ஜெலினா ஆஸ்டபென்கோ, உக்ரைனின் கிஷோனக் ஜோடியை எதிர்கொண்டது.
‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை சானியா ஜோடி 6–7 என இழந்தது. இரண்டாவது செட்டும் ‘டை பிரேக்கருக்கு’ சென்றது. கடும் சவால் கொடுத்த போதும் கடைசியில் சானியா ஜோடி 6–7 என நழுவவிட்டது. ஒரு மணி நேரம், 44 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் சானியா ஜோடி 6–7, 6–7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது.