பர்மிங்காம்: டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி முன்னேறியது.
இங்கிலாந்தின் பர்மிங்காமில் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் லுாசி ஹிரடெக்கா ஜோடி, பிரிட்டனின் ஹரியத் டார்ட், சாரா பேத் கிரே ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை சானியா ஜோடி 6–3 என கைப்பற்றியது. தொடர்ந்து அசத்திய சானியா ஜோடி அடுத்த செட்டை 6–2 என எளிதாக வசப்படுத்தியது. 58 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சானியா ஜோடி 6–3, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.