Advertisement


‘தில்லாக’ தினேஷ் கார்த்திக் * பாண்டிங் நம்பிக்கை

ஜூன் 10, 2022 22:53
 Comments  
 


Ricky Ponting backs Dinesh Karthik as India finisher in T 20 World Cup
 

புதுடில்லி: ‘‘உலக கோப்பை ‘டி–20’ தொடரில் தினேஷ் கார்த்திக் சிறந்த ‘பினிஷராக’ இருப்பார்,’’ என ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

இந்திய அணி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் 37. சமீபத்திய ஐ.பி.எல்., தொடரில் 330 ரன் குவித்த இவரது ‘ஸ்டிரைக் ரேட்’ 183 ஆக உள்ளது. இதையடுத்து மூன்று ஆண்டுக்குப் பின் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். தற்போது தென் ஆப்ரிக்க தொடரில் பங்கேற்றுள்ளார்.

இவர் குறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியது:

ஐ.பி.எல்., தொடரில் சிறந்த வீரராக இருப்பவர், இரண்டு அல்லது மூன்று போட்டி அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுத் தர வேண்டும் என அணி நிர்வாகம் விரும்பும். இது அவர்கள் கொடுத்த முதலீடுக்கு பலனாக பார்க்கப்படும். ஆனால் தினேஷ் கார்த்திக் கடந்த ஐ.பி.எல்., சீசனில் பெங்களூரு அணிக்காக கடைசி கட்டத்தில் ‘தில்லாக’ ஆடினார். பல போட்டிகளில் சிறப்பான ‘பினிஷிங்’ கொடுத்தார்.

பெங்களூரு அணியில் மற்ற வீரர்கள் அனைவரையும் விட சிறப்பாக செயல்பட்டார். தனது பேட்டிங் திறனை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளார். வரும் உலக கோப்பை ‘டி–20’ தொடரில் இந்திய அணியில் கார்த்திக் 5 அல்லது 6 வது இடத்தில் களமிறங்க வேண்டும். ஏனெனில் அணிக்கு சிறந்த ‘பினிஷராக’ இருப்பார் கார்த்திக். ஒருவேளை அவர் அணியில் இடம் பெறவில்லை என்றால் அது ஆச்சரியமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

 

விரைவில் மீள்வார்

பாண்டிங் கூறுகையில்,‘‘கிரிக்கெட் வீரர்களுக்கு ஏதாவது ஒரு சூழலில் மோசமான ‘பார்ம்’ வரத்தான் செய்யும். கோஹ்லியை பொறுத்தவரையில் 10 அல்லது 12 ஆண்டுகால கிரிக்கெட்டில் இதுபோன்ற சூழலை சந்தித்து இல்லை. கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இதிலிருந்து விரைவில் மீண்டு வருவார்,’’ என்றார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?