Advertisement


தமிழக வீராங்கனைகள் கலக்கல் * சென்னை தடகளத்தில்...

ஜூன் 10, 2022 22:48
 Comments  
 


National Inter State Senior Championships, chennai rosy meena
 

சென்னை: தடகள சாம்பியன்ஷிப் ‘போல் வால்ட்’ போட்டியின் மூன்று பதக்கங்களையும் தமிழக வீராங்கனைகள் தட்டிச் சென்றனர். 

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 28 முதல் ஆக. 8 வரை நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேற்று துவங்கியது. 23 மாநிலங்களில் இருந்து 600க்கும் அதிகமான நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இலங்கை தரப்பில் 11 பேர் வந்துள்ளனர்.

பெண்களுக்கான ‘போல் வால்ட்’ போட்டியில் தமிழக வீராங்கனைகள் கலக்கலாக தாண்டினர். பரனிகா 4.05 மீ., உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். 4.00 மீ., தாண்டிய ரோசி மீனா வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். மற்றொரு தமிழக வீராங்கனை பவித்ரா (3.90 மீ.,) வெண்கலம் பெற்றார். 

சஞ்ஜீவனி தங்கம்

பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் மஹாராஷ்டிராவின் சஞ்ஜீவனி, 33 நிமிடம் 16.43 வினாடி நேரத்தில் வந்து முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார். மற்றொரு மஹாராஷ்டிரா வீராங்கனை பிரயக்தா (33.59:34 நிமிடம்) வெள்ளி வென்றார். உ.பி.,யின் கவிதா (35.00:33 நிமிடம்) வெண்கலம் பெற்றார்.

ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் உ.பி.,யின் அபிஷேக் (29.55:51), குல்வீர் சிங் (29.55:71) தங்கம், வெள்ளி வென்றனர். ராஜஸ்தானின் தர்மேந்தர் (29.55:84) வெண்கலம் கைப்பற்றினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?