Advertisement


சென்னையில் தடகளம் * இன்று துவக்கம்

ஜூன் 09, 2022 20:06
 Comments  
 


National Inter State Senior Championships, chennai
 

சென்னை: மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று சென்னையில் துவங்குகிறது.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 28 முதல் ஆக. 8 வரை நடக்கவுள்ளது. இதற்குத் தயாராகவும், இந்திய அணியை முடிவு செய்யவும், மாநிலங்களுக்கு இடையிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று சென்னையில் துவங்குகிறது. 23 மாநிலங்களில் இருந்து 600க்கும் அதிகமான நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இலங்கையில் இருந்தும் 11 பேர் கொண்ட அணி வந்துள்ளது. 

நீரஜ் ‘நோ’

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, 3000 மீ., ஓட்டத்தில் 8வது முறையாக தனது சாதனையை தகர்த்த அவினாஷ் சபிள், அன்னிய மண்ணில் பயிற்சியில் இருப்பதால், சென்னை போட்டியில் பங்கேற்க மாட்டர். 

தனலட்சுமி எதிர்பார்ப்பு

துருக்கியில் பயிற்சி, போட்டிகளில் பங்கேற்ற பின் நாடு திரும்பிய தமிழகத்தின் தனலட்சுமி (200 மீ.,), ஹிமா தாஸ் (100 மீ.,), டுட்டீ சந்த் (100 மீ.,) இடையே காமன்வெல்த் இடம், உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற பலத்த போட்டி காணப்படுகிறது. தவிர பிரியா மோகன், பூவம்மாவும் காத்திருக்கின்றனர். 

ஜோதி நம்பிக்கை

100 மீ., ஓட்டத்தில் 13.04 வினாடியில் வந்த ஆந்திராவின் ஜோதி, உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதிபெற (12.80 வினாடி) முயற்சிக்கலாம். 200 மீ., ஓட்டத்தில் அசாமின் அம்லன் சாதிக்க காத்திருக்கிறார். நீளம் தாண்டுதலில் தேசிய சாதனை படைத்த முரளி ஸ்ரீசங்கர் (8.36 மீ.,), ஜெஸ்வின் ஆல்டிரின் (8.20 மீ.,) முகமது அனீஸ் (8.15 மீ.,) இடையே காமன்வெல்த் செல்ல கடும் போட்டி காணப்படுகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?