Advertisement


போபண்ணா விலகல்

ஜூன் 09, 2022 20:03
 Comments  
 


Indian Tennis, Rohan Bopanna skip Wimbledon 2022
 

நாட்டிங்காம்: விம்பிள்டன் டென்னிசில் இருந்து விலகினார் இந்தியாவின் போபண்ணா.

இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் ஜூன் 27 முதல் ஜூலை 10 வரை நடக்கவுள்ளது. உக்ரைன் மீதான போர் காரணமாக ரஷ்யா, பெலாரஸ் நட்சத்திரங்கள் இதில் பங்கேற்க ஆல் இங்கிலாந்து கிளப் அனுமதி மறுத்துள்ளது. இதனால், ‘விம்பிள்டனில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தரவரிசை புள்ளி வழங்கப்படாது,’ என ஆண்கள் (ஏ.டி.பி.,), பெண்கள் (டபிள்யு.டி.ஏ.,) டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்தது.

இதையடுத்து ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் 25வது இடத்திலுள்ள இந்தியாவின் ரோகன் போபண்ணா, விம்பிள்டனில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘கடந்த ஏப்ரல் முதல் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்கிறேன். விம்பிள்டன் இரட்டையரில் இம்முறை 5 ‘செட்’ வரை விளையாடப்பட உள்ளது. தரவரிசை புள்ளியும் இல்லாத நிலையில், சிறிய ஓய்வு எடுத்துக் கொள்ள இது தான் சரியான நேரம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?