நாட்டிங்காம்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ராம்குமார் ஜோடி முன்னேறியது.
இங்கிலாந்தில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஆஸ்திரேலியாவின் ஜான் ஸ்மித் ஜோடி, அமெரிக்காவின் ஜாக் சாக், பிரான்சின் லுகாஸ் ஜோடியை சந்தித்தது.
‘டை பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை ராம்குமார் ஜோடி 6–7 என இழந்தது. பின் சுதாரித்துக் கொண்ட ராம்குமார் ஜோடி அடுத்த செட்டை, ‘டை பிரேக்கர்’ சென்று 7–6 என வசப்படுத்தியது.
வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த ‘சூப்பர் டைபிரேக்கரில்’ ராம்குமார் ஜோடி 10–6 என அசத்தியது. ஒரு மணி நேரம், 36 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராம்குமார் ஜோடி 6–7, 7–6, 10–6 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.