புதுடில்லி: ‘ஜூனியர் ஸ்பீடு’ செஸ் தொடரில் கோப்பை வென்றார் இந்தியாவின் அர்ஜுன்.
உலகின் முன்னணி ‘ஜூனியர்’ நட்சத்திரங்கள் பங்கேற்ற ‘ஸ்பீடு’ செஸ் சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) ஆன்லைனில் நடந்தது. மொத்தம் ரூ.27 லட்சம் பரிசுத் தொகை கொண்டது. இதன் ‘நாக் அவுட்’ சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, சத்வானி வெளியேறிய நிலையில், கடந்த 2020, 2021 என தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக சாம்பியன் ஆன நிகால் சரின், பைனலுக்கு முன்னேறினார்.
இதில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியை சந்தித்தார்.
மொத்தம் 24 போட்டிகள் நடந்தன. இதில் துவக்கத்தில் இருந்தே நிகால் சரின் முன்னிலையில் இருந்தார். ஒரு கட்டத்தில் 7.5–6.5 என முன்னிலை பெற்றார். கடைசி ஐந்து போட்டிகளில் அசத்தில் ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்ஜுன் தொடர்ந்து வெற்றி பெற்றார். முடிவில் அர்ஜுன் 13.5–10.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ‘ஜூனியர்’ சாம்பியன் ஆனார்.