Advertisement


கோஹ்லி, ரோகித் ஆட்டம் சரியா * கபில் தேவ் காட்டம்

ஜூன் 06, 2022 22:28
 Comments  
 


When we need runs, they get out, Kapil Dev slams Virat Kohli, KL Rahul, Rohit Sharma
 

புதுடில்லி: ‘‘கோஹ்லி, ரோகித், ராகுல் என மூவரும் ‘டி–20’ போட்டிக்கு ஏற்ப துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்,’’ என கபில் தேவ் வலியுறுத்தினார். 

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி–20’ தொடரில் மோத உள்ளன. முதல் போட்டி வரும் 9ல் டில்லியில் நடக்கவுள்ளது. ‘சீனியர்’ பேட்டர்கள் கோஹ்லி, ரோகித்திற்கு ஓய்வு தரப்பட, இந்திய அணி கேப்டனாக ராகுல் களமிறங்குகிறார். 

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் 63, கூறியது:

கோஹ்லி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் என மூவருக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதுவே அவர்களுக்கு நெருக்கடியாக அமைகிறது. இதற்காக தங்கள் ‘ஸ்டைலை’ மாற்றிக் கொள்ளக் கூடாது. ‘டி–20’ கிரிக்கெட்டில் துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இந்த ‘மும்மூர்த்திகள்’ பேட்டிங்கில் 100 பந்துகளை சந்தித்தால் 150 முதல் 160 ரன் (‘ஸ்டிரைக் ரேட்’) என எடுக்கும் திறமை கொண்டவர்கள். ஆனால் எப்போது இந்திய அணிக்கு ரன் தேவைப்படுகிறதோ, அப்போது இவர்கள் அவுட்டாகி சென்று விடுகின்றனர். இதனால் மற்ற வீரர்களுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படுகிறது. 

ராகுலை பொறுத்தவரையில், ‘20 ஓவர்களும் நின்று விளையாடுங்கள்’ என அணி நிர்வாகம் சொல்கிறது என்பதற்காக, கடைசியில் 60 ரன் மட்டும் எடுத்து திரும்பினால், அதை நியாயப்படுத்த முடியாது. போட்டிக்கு ஏற்ப அணுகுமுறையில் மாற்றம் வேண்டும். ஒருவேளை இதுபோன்ற வீரர்கள் தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், ‘டி–20’ கிரிக்கெட்டுக்கு ஏற்ப இந்திய அணி புதிய வீரர்களை களமிறக்க வேண்டும். ஏனெனில் சிறந்த வீரர்கள் என்ற பெயர் மட்டும் வெற்றிக்கு போதாது. சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கபில் தேவ் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?