ஸ்டாவஞ்சர்: நார்வே ஓபன் செஸ் தொடரின் ஐந்தாவது சுற்று போட்டியை பிரக்ஞானந்தா ‘டிரா’ செய்தார்.
நார்வேயில் சர்வதேச ஓபன் செஸ் தொடர் நடக்கிறது. சர்வதேச தரவரிசையில் 2700 புள்ளிகளுக்கும் கீழ் உள்ளவர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா பங்கேற்கிறார்.
சமீபத்திய மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன், நெதர்லாந்தின் அனிஷ் கிரி உள்ளிட்ட ஜாம்பவான் வீரர்களை சாய்த்து, இரண்டாவது இடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தா, முதல் நான்கு சுற்றில் மூன்று வெற்றி, ஒரு ‘டிரா’ செய்தார்.
ஐந்தாவது சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் மடமினோவை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்தே இருவரும் சம பலத்தில் விளையாடினர். 60 நகர்த்தலுக்குப் பின் இருவரும் போட்டியை ‘டிரா’ செய்தனர்.