மங்களூரு: நீர்ச்சறுக்கு போட்டியில் தமிழகத்தின் ஸ்ரீசித்தி பைனலுக்கு முன்னேறினார்.
இந்தியன் ஓபன் ‘சர்பிங்’ (நீர்ச்சறுக்கு) போட்டி மங்களூருவில் நடக்கிறது. இதன் பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனை ஸ்ரீசித்தி, 10.37 புள்ளிகள் பெற்று பைனலுக்கு முன்னேறினார். தவிர கர்நாடகாவின் இஷிதா (6.17), சின்சனா (7.30), கோவாவின் பனார்சும் (11.27) பைனலுக்குள் நுழைந்தனர்.
வளர்ந்து வரும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான அரையிறுதியில் தமிழகத்தின் 13 வயது வீரர் கிஷோர் குமார் 15.50 புள்ளிகள் பெற்று பைனலுக்கு முன்னேறினார். இந்த நீர்ச்சறுக்கு போட்டிகளில் ஒரு வீரர்/வீராங்கனை சார்பில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இது.
தவிர அருண் (11.10), நவீன் குமார் (10.17), ஜீவனும் (6.46) பைனலுக்குள் நுழைந்தனர்.