Advertisement


நான்காவது சுற்றில் ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

மே 28, 2022 21:35
 Comments  
 


French Open Tennis, Iga Swiatek, Bopanna, Medvedev, Jessica Pegula, Badosa
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுக்கு போலந்தின் ஸ்வியாடெக், ரஷ்யாவின் மெட்வெடேவ் உள்ளிட்டோர் முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், மான்டினேக்ரோவின் டான்கா கோவினிக் மோதினர். அபாரமாக ஆடிய ஸ்வியாடெக் 6–3, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, 4வது சுற்றுக்குள் நுழைந்தார்.

 

மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6–1, 7–6 என, சுலோவேனியாவின் டமாரா ஜிடான்செக்கை வீழ்த்தினார். ரஷ்யாவின் டாரியா கசட்கினா 6–3, 6–2 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சை வீழ்த்தினார். ருமேனியாவின் இரினா–கமேலியா பெகு 6–1, 6–4 என, பிரான்சின் லியோலியா ஜீன்ஜீனை தோற்கடித்தார்.

 

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் படோசா 3–6, 1–2 என பின்தங்கி இருந்த போது காயத்தால் விலகியதால், ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

 

மெட்வெடேவ் வெற்றி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ், செர்பியாவின் மியோமிர் கெக்மனோவிச் மோதினர். அபாரமாக ஆடிய மெட்வெடேவ் 6–2, 6–4, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

 

மற்றொரு 3வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6–3, 7–6, 6–3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் மெக்கன்சி மெக்டொனால்டை வென்றார். ரஷ்யாவின் ஆன்ட்ரே ரப்லெவ் 6–4, 3–6, 6–2, 7–6 என சிலியின் கிறிஸ்டியன் காரினை தோற்கடித்தார்.

 

காலிறுதியில் போபண்ணா ஜோடி

ஆண்கள் இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடி 6–7, 7–6, 7–6 என்ற செட் கணக்கில் ‘நடப்பு விம்பிள்டன் சாம்பியன்’ குரோஷியாவின் நிகோலா மெக்டிக், மேட் பவிக் ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?