துபாய்: துபாய் பாரா பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் பிரமோத் பகத் முன்னேறினார்.
துபாயில், மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் ‘எஸ்.எல்.3’ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத், நேஹால் குப்தா மோதினர். அபாரமாக ஆடிய பிரமோத் பகத் 18–21, 21–15, 21–11 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் ‘எஸ்.எல்.4’ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தருண் தில்லான், தென் கொரியாவின் நாடன் சோ மோதினர். இதில் அசத்திய தருண் 21–15, 20–22, 21–14 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் ‘எஸ்.எல்.3’ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மன்தீப் கவுர் 20–22, 21–11, 21–8 என தாய்லாந்தின் தருணீ ஹென்பிரைவானை வீழ்த்தினார். இப்பிரிவில் மற்றொரு இந்திய வீராங்கனை மானஷி ஜோஷி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
பெண்கள் ஒற்றையர் ‘எஸ்.யு.5’ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மணிஷா ராம்தாஸ் 21–17, 21–11 என இத்தாலியின் ரோசா இபோமா டி மார்கோவை வென்றார்.
இரட்டையரில் இந்தியாவின் தருண்–நிதேஷ் குமார், பிரமோத் பகத்–மணிஷா, பார்மர்–பாலக் கோஹ்லி ஜோடிகள் அரையிறுதிக்குள் நுழைந்தன.