Advertisement


ஹாக்கி: இந்தியா இமாலய வெற்றி * ‘சூப்பர்–4’ சுற்றுக்கு தகுதி

மே 26, 2022 22:33
 Comments  
 


Indian men hockey team qualifies for knockout stage of Asia Cup with win over Indonesia
 

ஜகார்த்தா: ஆசிய கோப்பை ஹாக்கி தொடரின் ‘சூப்பர்–4’ சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது. நேற்று நடந்த லீக் போட்டியில் 16–0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வென்றது.

இந்தோனேஷியாவில் ஆண்களுக்கான 11வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளுடன் இடம் பிடித்து இருந்தது. முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘டிரா’ செய்த இந்தியா, அடுத்து ஜப்பானிடம் வீழ்ந்தது. 

நேற்று தனது கடைசி லீக் போட்டியில் இந்தோனேஷியாவை சந்தித்தது. இதில் குறைந்தது 15–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் ‘சூப்பர்–4’ சுற்றுக்கு செல்லலாம் என்ற இக்கட்டான நிலையில் இந்தியா களமிறங்கியது. போட்டியின் முதல் 9 நிமிடம் வரை கோல் கணக்கை இந்தியா துவக்கவில்லை. 

கார்த்தி அபாரம்

இதன் பின் இந்தியா கோல் மழை பொழிந்தது. 10, 11வது நிமிடம் ராஜ்பர் 2 கோல் அடித்தார். உத்தம் சிங் (14 வது), சஞ்ஜீப் (20வது) தங்கள் பங்கிற்கு தலா ஒரு கோல் அடிக்க, 19, 24வது நிமிடத்தில் சுனில் 2 கோல் அடித்தார். இந்திய அணி முதல் பாதியில் 6–0 என முந்தியது. 

அடுத்த 30 நிமிடத்தில் 9 கோல் அடிக்க வேண்டும் என்ற நிலையில் இரண்டாவது பாதியில் முதல் 10 நிமிடம் ஒரு கோல் கூட இந்தியா அடிக்கவில்லை. பின் இந்திய வீரர்கள் சுதாரித்துக் கொண்டனர். போட்டியின் 40 வது நிமிடம் அசத்திய தமிழக வீரர் கார்த்தி, முதல் கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர் 56 வது நிமிடம் ஒரு ‘பீல்டு’ கோல் அடித்தார்.

இரண்டு ‘ஹாட்ரிக்’

மறுபக்கம் திப்சன் டிர்கே 42, 47, 59 வது நிமிடங்களில் அசத்தி, ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து சாதித்தார். சுதேவ் தன்பங்கிற்கு ‘ஹாட்ரிக்’ (45, 46, 55வது) கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 16–0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றி பெற்றது. கோப்பை வெல்வதற்கான ‘சூப்பர்–4’ சுற்றுக்கு தகுதி பெற்றது. இதில் நாளை ஜப்பான், 29ல் மலேசியா, 31ல் தென் கொரியாவை சந்திக்கவுள்ளது. 

 

வெளியேறியது பாக்.,

‘ஏ’ பிரிவு லீக் சுற்று முடிவில் ஜப்பான் (6 புள்ளி) ‘சூப்பர்–4’ சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்தோனேஷியா (0) வெளியேறியது. இந்தியா (4), பாகிஸ்தான் (4) அணிகள் சம புள்ளிகள் பெற்றன. ஆனால் கோல் அடிப்படையில் முன்னிலை பெற்ற இந்திய அணி (+13), பாகிஸ்தானை (+12) வெளியேற்றியது. இரண்டாவது இடம் பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

இதையடுத்து இந்தியா, ஜப்பான், ‘பி’ பிரிவில் மலேசியா, தென் கொரிய அணிகள் இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை தொடருக்கு (2023) தகுதி பெற்றன. 2014க்குப் பின் மீண்டும் பாகிஸ்தான் உலக கோப்பை வாய்ப்பை இழந்தது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?