Advertisement


மாத்யூஸ், சண்டிமால் சதம்: இலங்கை அணி ஆதிக்கம்

மே 26, 2022 21:56
 Comments  
 


Bangladesh, Sri Lanka, Second Test Cricket, Dinesh Chandimal, Angelo Mathews, Century
 

மிர்புர்: வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் மாத்யூஸ், சண்டிமால் சதம் விளாச, முதல் இன்னிங்சில் இலங்கை அணி 506 ரன் குவித்தது.

வங்கதேசம் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 365 ரன் எடுத்தது. மூன்றாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்திருந்தது. மாத்யூஸ் (58), சண்டிமால் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

இரண்டு சதம்: நான்காம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கையின் மாத்யூஸ், டெஸ்ட் அரங்கில் தனது 13வது சதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சண்டிமால், தன்பங்கிற்கு சதம் விளாசினார். ஆறாவது விக்கெட்டுக்கு 199 ரன் சேர்த்த போது சண்டிமால் (124) அவுட்டானார்.

டிக்வெல்லா (9), ரமேஷ் மெண்டிஸ் (10), பிரவீன் ஜெயவிக்ரமா (0), அசிதா பெர்ணான்டோ (2) ஏமாற்றினர். முதல் இன்னிங்சில் இலங்கை அணி 506 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. மாத்யூஸ் (145) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் சாகிப் அல் ஹசன் 5, எபாதத் ஹொசைன் 4 விக்கெட் கைப்பற்றினர்.

 

‘டாப்–ஆர்டர்’ சரிவு: பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (0), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (2), கேப்டன் மோமினுல் ஹக் (0), மஹ்முதுல் ஹசன் ஜாய் (15) ஏமாற்றினர். நான்காவது நாள் ஆட்ட முடிவில், 2வது இன்னிங்சில் வங்கதேச அணி 4 விக்கெட்டுக்கு 34 ரன் எடுத்து, 107 ரன் பின்தங்கி இருந்தது. முஷ்பிகுர் ரஹிம் (14), லிட்டன் தாஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் அசிதா பெர்ணான்டோ 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?