Advertisement


முதல் வெற்றி பெறுமா இந்தியா * ஆசிய ஹாக்கியில் எதிர்பார்ப்பு

மே 25, 2022 22:33
 Comments  
 


Asia Cup men hockey tournament India eye big win against Indonesia
 

ஜகார்த்தா: ஆசிய கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் இன்று இந்திய அணி, இந்தோனேஷியாவை சந்திக்கிறது.

இந்தோனேஷியாவில் ஆண்களுக்கான 11வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடக்கிறது. ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘டிரா’ செய்த இந்தியா, ஜப்பானிடம் 2–5 என வீழ்ந்தது.

‘ஏ’ பிரிவில் 2 வெற்றி பெற்ற ஜப்பான் (6 புள்ளி) கோப்பை வெல்வதற்கான ‘சூப்பர்–4’ சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் (4), இந்தியா (1) அடுத்த இரு இடத்தில் உள்ளன. இன்று இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் இந்தோனேஷியாவை சந்திக்கிறது. இதில் அதிக கோல் வித்தியாசத்தில் இந்தியா வெல்ல வேண்டும்.

ஏற்கனவே முதல் இரு போட்டியில் இந்தோனேஷியா 0-–9, 0-–13 என்ற கணக்கில் தோற்றது. இதனால் சர்தார் சிங் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இன்று இமாலய வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.

மற்றொரு போட்டியில் ஜப்பானிடம், பாகிஸ்தான் தோற்க வேண்டும். இப்படி நடந்தால் இந்தியா, பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்து ‘சூப்பர்–4’ சுற்றுக்கு முன்னேறலாம். இல்லையெனில் 5 முதல் 8 வரையிலான இடத்தை பெற போட்டியிட வேண்டும்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?