Advertisement


தங்கம் வென்றார் வித்யா * தமிழக வீராங்கனைகள் அசத்தல்

மே 24, 2022 22:46
 Comments  
 


Nayana James pips Ancy Sojan in battle for IGP4 long jump crown, VITHYA
 

புவனேஸ்வர்: இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் 400 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை வித்யா.

இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டி புவனேஸ்வரில் நடந்தது. பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா, 53.95 வினாடி நேரத்தில் வந்து தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார். கர்நாடகாவின் வித்யாகுமாரிக்கு (54.67 வினாடி) வெள்ளி கிடைத்தது.

பெண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் பரனிகா, 4.05 மீ., உயரம் தாண்டி தங்கம் கைப்பற்றினார். 

தமிழக வீராங்கனைகள் ரோசி மீனா (4.00 மீ.,), பிரீத்திகா (3.40 மீ.,) அடுத்த இரு இடங்களை பிடித்து வெள்ளி, வெண்கலம் பெற்றனர்.

நயனா தங்கம்

நீளம் தாண்டுதல் போட்டியில் கடும் போட்டி நிலவியது. கடைசியில் 6.37 மீ., துாரம் தாண்டிய நயனா ஜேம்ஸ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.

ஆன்சி சோஜன் 6.35 மீ., துாரம் தாண்டி இரண்டாவது இடம் பெற்றார். 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்ற ஷைலி சிங், 6.27 மீ., துாரம் மட்டும் தாண்டி, வெண்கலம் கைப்பற்றினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?