Advertisement


இரண்டாவது சுற்றில் ஜோகோவிச்

மே 24, 2022 22:16
 Comments  
 


french open 2022 tennis, emma raducanu
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார். 

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று முதல் சுற்று போட்டிகள் நடந்தன. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் ‘நம்பர்–1’ வீரர், செர்பியாவின் ஜோகோவிச், ஜப்பானின் நிஷியோகாவை சந்தித்தார். இதில் ஜோகோவிச் 6–3, 6–1, 6–0 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

உலகின் ‘நம்பர்–2’ வீரர் ரஷ்யாவின் மெத்வெடேவ், 6–4, 6–4, 6–4 என்ற கணக்கில் லிதுவேனியாவின் பெரான்கிசை வென்றார். மற்ற முதல் சுற்று போட்டிகளில் ரிச்சர்டு காஸ்குயட் (பிரான்ஸ்), ரஷ்யாவின் ரூபலெவ் வெற்றி பெற்றனர்.

கனடாவின் ஷபோவலோவ், 3–6, 1–6, 6–7 என டென்மார்க்கின் ரூனேயிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.  

ஆஸ்டபென்கோ வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவில் லாட்வியாவின் ஆஸ்டபென்கோ, இத்தாலியின் பிரான்செட்டியை சந்தித்தார். இதில் ஆஸ்டபென்கோ 6–1, 6–4 என எளிதாக வெற்றி பெற்றார். பிரிட்டனின் எம்மா ரடுகானு, செக் குடியரசின் நோஸ்கோவாவை 6–7, 7–5, 6–1 என்ற கணக்கில் போராடி வீழ்த்தி, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். 

மற்ற முதல் சுற்று போட்டிகளில் கரோலின் பிலிஸ்கோவா (செக் குடியரசு), அலைஸ் கார்னெட், கரோலின் கார்சியா (பிரான்ஸ்), ரைபகினா (கஜகஸ்தான்), அலெக்சாண்ட்ரோவா (ரஷ்யா) வெற்றி பெற்றனர். 

 

போபண்ணா ஜோடி கலக்கல்

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, நெதர்லாந்தின் மாட்வே மிடில்கூப் ஜோடி, 6–4, 6–1 என பிரான்சின் வெய்ன்பர்க், லுகா வான் ஜோடியை வென்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?