Advertisement


கடைசி நேரத்தில் இந்தியா ‘டிரா’ * கோல் அடித்து அசத்திய கார்த்தி செல்வம்

மே 23, 2022 22:40
 Comments  
 


India concede late goal to draw with Pakistan in Asia Cup hockey
 

ஜகார்த்தா: ஆசிய கோப்பை ஹாக்கி லீக் போட்டியில் கடைசி நேரத்தில் ஏமாற்றிய இந்திய அணி,  போட்டியை ‘டிரா’ செய்தது. தமிழக வீரர் கார்த்தி செல்வம், அறிமுக போட்டியில் கோல் அடித்து அசத்தினார்.

இந்தோனேஷியாவில் ஆண்களுக்கான 11வது ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நேற்று துவங்கியது. ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, தென் கொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன.  

உலகத்தரவரிசையில் ‘நம்பர்–3’ ஆக உள்ள இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா அணிகளுடன் இடம் பிடித்துள்ளது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்தித்தது. இந்திய அணியில் 13 ஆண்டுக்குப் பின் தமிழக (அரியலுார்) வீரர் கார்த்தி செல்வம், சர்வதேச அரங்கில் அறிமுக வாய்ப்பு பெற்றார். மற்றொரு தமிழக வீரர் மாரீஸ்வரன் சக்திவேல் (கோவில்பட்டி) மாற்று வீரராக, முதல் போட்டியில் பங்கேற்றார். 

9வது நிமிடத்தில் இந்தியாவுக்கு ‘பெனால்டி கார்னர்’ கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கார்த்தி, அதிவேகமாக அடித்தார். பாகிஸ்தான் வீரர் முகமது அப்துல்லா ‘ஸ்டிக்கில்’ பட்டு, பந்து வலைக்குள் செல்ல, கோலாக மாறியது. முதல் பாதியில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது. 

வீணான நம்பிக்கை

போட்டி முடிய 69 வினாடி இருந்த போது, பாகிஸ்தான் அணிக்கு ‘பெனால்டி கார்னர்’ கிடைத்தது. இதை அப்துல் ராணா (59 வது நிமிடம்) கோலாக மாற்ற, இந்திய ரசிகர்கள் சோகம் அடைந்தனர்.

கடைசி 10 வினாடி இருந்த போது, இந்திய வீரர் சிம்ரன்ஜீத் சிங் அடித்த பந்து கோல் போஸ்டுக்கு வெளியே செல்ல, இந்திய அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. முடிவில் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. 

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஜப்பான் அணி 9–0 என இந்தோனேஷியாவை வென்றது. ‘பி’ பிரிவில் மலேசியா (7–0) ஓமனை வீழ்த்தியது. தென் கொரியா 6–1 என வங்கதேசத்தை சாய்த்தது. 

இன்று இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஜப்பானை எதிர்கொள்கிறது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?