Advertisement


பிரக்ஞானந்தா ஆனந்தம் * கார்ல்சனை வீழ்த்தினார்

மே 21, 2022 22:23
 Comments  
 


praggnanandhaa beat carlsen
 

புதுடில்லி: மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தினார்.

‘சாம்பியன்ஸ் செஸ் டூர்’ தொடரின் ஒரு பகுதியாக ‘செஸ்சபிள் மாஸ்டர்ஸ்’ செஸ் தொடர் ஆன்லைன் வழியாக நடக்கிறது. உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி உட்பட 16 பேர் பங்கேற்கின்றனர்.

முதல் நான்கு நாள் முதற்கட்ட போட்டிகள் நடக்கின்றன. ‘டாப்–8’ இடம் பெறும் வீரர்கள் கடைசி நான்கு நாள் நடக்கும் ‘நாக் அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவர்.

இதன் ஐந்தாவது சுற்றில் கார்ல்சன், பிரக்ஞானந்தா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, போட்டியின் 41 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். சமீபத்தில் ஏர்திங்க்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் தொடரிலும் இதுபோல பிரக்ஞானந்தா, கார்ல்சனை வீழ்த்தி இருந்தார்.

இதுவரை முடிந்த 8 சுற்று முடிவில் பிரக்ஞானந்தா 3 வெற்றி, 3 ‘டிரா’, 2 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று, 6வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சீனாவின் வெய் யி (18) உள்ளார். ஸ்பெயினின் டேவிட் ஆன்டன் (15), கார்ல்சன் (15) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். இந்திய வீரர்கள் ஹரிகிருஷ்ணா (11) 7வது, விதித் குஜ்ராத்தி (8) 12வது இடத்தில் உள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?