Advertisement


இதயம் கவர்ந்த அன்கிதா * டென்னிஸ் கூட்டமைப்பு விருது

மே 20, 2022 22:35
 Comments  
 


Tennis, Ankita Raina becomes second Indian to be honoured with BJK Cup Heart Award
 

புதுடில்லி: ‘மக்கள் இதயங்களை கவர்ந்தவர்’ என்ற டென்னிஸ் விருது வென்றார் இந்தியாவின் அன்கிதா ரெய்னா.

பெண்கள் டென்னிசின் உலக கோப்பை என்றழைக்கப்படும் ‘பில்லி ஜீன் கிங்’ கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு, மக்களின் இதயங்களை கவர்ந்தவர் என்ற ‘ஹார்ட்’ விருது 2009 முதல் வழங்கப்படுகிறது.

இதன் 12வது விருதுக்கான பரிந்துரை பட்டியல் கடந்த மே 10ல் வெளியானது. ஆசிய/ஓசியானா பிரிவில் இந்தியா சார்பில் அன்கிதா ரெய்னா, ஜப்பானின் ஷுகோ, ஷிபகரா பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றனர். வெற்றியாளரை முடிவு செய்ய இணையதளத்தில் ரசிகர்கள் ஓட்டளித்தனர்.

இதில் அதிக ஓட்டுகள் பெற்ற அன்கிதா ரெய்னா 29, ‘ஹார்ட்’ விருதை தட்டிச் சென்றார். கடந்த 2020ல் சானியாவுக்கு பின் இவ்விருது பெற்ற இரண்டாவது இந்திய வீராங்கனை ஆனார் அன்கிதா. இவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு கிடைக்கும். இதை, அவர் விரும்பும் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக தரலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?