ஸ்டிராஸ்பர்க்: டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி முன்னேறியது.
பிரான்சில் பெண்களுக்கான ஸ்டிராஸ்பர்க் டபிள்யு.டி.ஏ., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, லுாசி ஹிரடெக்கா ஜோடி, பெலாரசின் மரோஜாவா, அமெரிக்காவின் கிறிஸ்டியன் கெய்த்லின் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை சானியா ஜோடி 6–3 என எளிதாக கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சானியா ஜோடி அடுத்த செட்டையும் 6–3 என கைப்பற்றியது.
ஒரு மணி நேரம், 11 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சானியா ஜோடி 6–3, 6–3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. இதில் அமெரிக்காவின் நிகோல் மார்டினஸ், ஆஸ்திரேலியாவின் டேரியா செவில்லே ஜோடியை சந்திக்கவுள்ளது.