வார்சா: போலந்து செஸ் தொடரின் முதல் ஐந்து சுற்றிலும் வெற்றி பெற்றார் ஆனந்த்.
போலந்தின் வார்சா நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது.
ஐந்து முறை உலக சாம்பியன் ஆன இந்தியாவின் ஆனந்த், அமெரிக்காவின் வெஸ்லே உட்பட 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். முதலில் ‘ரேபிட்’ முறையில் போட்டிகள் நடக்கின்றன.
சிறப்பு அனுமதியின் (‘வைல்டு கார்டு’) பேரில் களமிறங்கிய ஆனந்த், முதல் நாளில் பங்கேற்ற மூன்று சுற்றிலும் வெற்றி பெற்றார்.
நேற்று நான்காவது சுற்றில் ஆனந்த், உக்ரைனின் கிரில் செவ்சென்கோவை, 38வது நகர்த்தலில் வென்றார். ஐந்தாவது சுற்றில் ஆர்மேனியாவின் லெவான் ஆரோனியனை 24 நகர்த்தலில் வீழ்த்தினார்.
ஐந்து சுற்று முடிவில் ஆனந்த், 10.0 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார். போலந்தின் டுடா (7.0), இத்தாலியின் பேபியானோ காருணா (6.0) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.