Advertisement


உலக குத்துச்சண்டை: நிகாத் கலக்கல் * மணிஷா, பர்வீனுக்கு வெண்கலம்

மே 18, 2022 22:46
 Comments  
 


Nikhat Zareen Enters World Boxing Championship Final
 

இஸ்தான்புல்: உலக குத்துச்சண்டை தொடரின் பைனலுக்கு இந்தியாவின் நிகாத் ஜரீன் முன்னேறினார். மணிஷா, பர்வீன் வெண்கலம் வென்றனர்.

துருக்கியில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 93 நாடுகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தன. 52 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நிகாத் ஜரீன், பிரேசிலின் கரோலின் அல்மெய்டாவை சந்தித்தார்.

முதல் சுற்றில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய நிகாத், அடுத்த சுற்றில் லேசாக தடுமாறினார். மூன்றாவது, கடைசி சுற்றிலும் அசத்திய இவர் 5–0 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

* 57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மணிஷா, இத்தாலியின் இர்மா டெஸ்டாவை சந்தித்தார். இதில் திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்திய மணிஷா 0–5 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கம் பெற்றார்.

* அடுத்து நடந்த 63 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன் ஹூடா, அயர்லாந்தின் சாரா அமியிடம் 1–4 என்ற கணக்கில் வீழ்ந்து, வெண்கலப்பதக்கம் வென்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?