Advertisement


பைனலில் இந்திய அணி * உலக வில்வித்தையில் அசத்தல்

மே 18, 2022 22:37
 Comments  
 


Archery World Cup Stage 2 Compound men archers enter final, women bags bronze
 

குவாங்ஜு: உலக வில்வித்தை காம்பவுண்டு பிரிவில் இந்திய ஆண்கள் அணி பைனலுக்கு முன்னேறியது.

தென் கொரியாவில் உலக வில்வித்தை ‘ஸ்டேஜ் 2’ போட்டிகள் நடக்கின்றன. ஆண்கள் காம்பவுண்டு பிரிவில் காலிறுதியில் இந்தியாவின் அபிஷேக் சர்மா, ரஜத் சவுகான், அமன் செய்னி அடங்கிய அணி, வலிமையான அமெரிக்காவை சந்தித்தது. இதில் இந்தியா 234–228 என வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இதில் உலகின் முன்னணி அணியான தென் கொரியானை எதிர்கொண்டது. இதன் முதல் பாதி முடிவில் இரு அணிகளும் 117–117 என சமநிலையில் இருந்தன. மூன்றாவது சுற்றில் ஏமாற்றிய இந்தியா 164–176 என பின்தங்கியது. கடைசி, நான்காவது சுற்றில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட 233–233 என போட்டி சமனில் முடிந்தது.

வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி ‘ஷூட் ஆப்’ முறைக்கு சென்றது. இதில் 29–26 என வெற்றி பெற்ற இந்திய அணி, பைனலுக்கு முன்னேறியது.

காம்பவுண்டு பெண்கள் பிரிவில் இந்தியாவின் அவ்னித் கவுர், முஸ்கான், பிரியா அடங்கிய அணி, அரையிறுதியில் தென் கொரியாவிடம் வீழ்ந்தது. பின் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா 232–231 என துருக்கியை வீழ்த்தியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?