பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்று இரண்டாவது போட்டியில் ராம்குமார் ராமநாதன் தோல்வியடைந்தார்.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் 22ல் பாரிசில் துவங்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன. இந்தியா சார்பில் உலகத் தரவரிசையில் 178 வது இடத்திலுள்ள ராம்குமார் ராமநாதன், இரண்டாவது தகுதி போட்டியில் 595 வது இடத்தில் இருந்த பிரான்சின் சீன் குயினனை எதிர்கொண்டார்.
இதன் முதல் செட்டை ‘டை பிரேக்கர்’ வரை சென்று 6–7 என கோட்டை விட்ட ராம்குமார், அடுத்த செட்டையும் 4–6 என நழுவவிட்டார். முடிவில் ராம்குமார் 6–7, 4–6 என்ற நேர் செட்கணக்கில் தோல்வியடைந்தார்.