ஷிம்கெண்ட்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு அர்ஜுன் ஜோடி முன்னேறியது.
கஜகஸ்தானில் ஆண்களுக்கான ஷிம்கெண்ட் சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் காடே, உக்ரைனின் மனவோவ் ஜோடி, ரஷ்யாவின் போப்ரோவ், ஷிவ்சென்கோ ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை அர்ஜுன் ஜோடி 7–5 என போராடி வசப்படுத்தியது. ‘டை பிரேக்கர்’ வரை சென்ற அடுத்த செட்டையும் அர்ஜுன் ஜோடி 7–6 என கைப்பற்றியது. ஒரு மணி நேரம் 19 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அர்ஜுன் ஜோடி 7–5, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.