போபால்: பெண்களுக்கான தேசிய ஹாக்கி தொடரில் ஒடிசா அணி கோப்பை வென்றது.
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில், சீனியர் பெண்களுக்கான தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடந்தது. இதில் தமிழகம், பெங்கால், ராஜஸ்தான், கேரளா, டில்லி உள்ளிட்ட 27 அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின. தமிழக அணி லீக் சுற்றுடன் திரும்பியது.
நேற்று நடந்த பைனலில் ஒடிசா, கர்நாடக அணிகள் மோதின. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் 34வது நிமிடம் ஒடிசா வீராங்கனை பூனம் பார்லா முதல் கோல் அடித்தார். போட்டியின் 59 வது நிமிடம் ஆஷிம் ஒரு கோல் அடிக்க, ஒடிசா அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தங்கம் வென்றது. இத்தொடரில் முதன் முறையாக சாம்பியன் கோப்பை தட்டிச் சென்றது.
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜார்க்கண்ட் அணி 3–2 என்ற கோல் கணக்கில் ஹரியானாவை வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது.