Advertisement


மும்பைக்கு பத்தாவது தோல்வி * கடைசி ஓவரில் பரிதாபம்

மே 17, 2022 23:56
 Comments  
 


IPL 2022, MUMBAI VS Hyderabad
 

மும்பை: ‘டி–20’ தொடரில் மும்பை அணி பத்தாவது தோல்வி அடைந்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் 3 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்திடம் வீழ்ந்தது. 

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ‘டி–20’ கிரிக்கெட் லீக் போட்டியில் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. மும்பை அணி ‘டாஸ்’ வென்று பீல்டிங் தேர்வு செய்தது. 

திரிபாதி அரைசதம்

ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா (8), பிரியம் கார்க் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பிரியம் 26 பந்தில் 42 ரன் எடுத்தார். திரிபாதி இத்தொடரில் மூன்றாவது அரைசதம் எட்டினார். மெரிடித் பந்தில் பூரன் (38) அவுட்டானார். ராமன்தீப் வீசிய 17வது ஓவரில் திரிபாதி (76), மார்க்ரம் (2) அவுட்டாகினர். பும்ராவின் கடைசி பந்தில் வாஷிங்டன் சுந்தர் (9) போல்டானார். 

ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 193 ரன் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் (8) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை சார்பில் ராமன்தீப் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.

ரோகித் சோகம்

கடின இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு ரோகித், இஷான் கிஷான் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. இருவரும் வேகமாக ரன் சேர்க்க, மும்பை அணி 10 ஓவரில் 89/0 ரன் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 64 பந்தில் 95 ரன் சேர்த்த போது, 48 ரன் எடுத்த ரோகித் , சுந்தர் சுழலில் சிக்கினார். 

உம்ரான் ‘வேகம்’

மறுபக்கம் ஐதராபாத் அணிக்காக ‘வேகத்தில்’ மிரட்டத் துவங்கினார் உம்ரான் மாலிக். முதலில் இஷான் கிஷானை (43) அவுட்டாக்கிய உம்ரான், அடுத்து திலக் வர்மா (8), டேனியல் சாம்சை (15), வெளியேற்றினார். திரிஸ்டனும் (2) ரன் அவுட்டாக, மும்பை தோல்விப் பாதைக்கு திரும்பியது.

திடீர் திருப்பம்

மும்பை வெற்றிக்கு 18 பந்தில் 45 ரன் தேவைப்பட்டன. நடராஜன் வீசிய 18வது ஓவரில், டேவிட் 4 சிக்சர் அடிக்க, போட்டியில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. இதே ஓவரின் கடைசி பந்தில் டேவிட் (46) ரன் அவுட்டானார். கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்டன. மும்பை அணி 15 ரன் மட்டும் எடுத்தது. 

20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 190 ரன் மட்டும் எடுத்து, இத்தொடரில் மும்பை 10வது தோல்வியை பதிவு செய்தது. ராமன்தீப் (14), பும்ரா (0) அவுட்டாகாமல் இருந்தனர். ஐதராபாத் சார்பில் உம்ரான் 3 விக்கெட் சாய்த்தார். 

 

3

நடப்பு ஐ.பி.எல்., தொடரில் பேட்டிங் ஆர்டரில் 3வதாக களமிறங்கி அதிக அரைசதம் அடித்த வீரர் ஆனார் ஐதராபாத் அணியின் திரிபாதி. இதுவரை இவர் 3 அரைசதம் அடித்துள்ளார். ஸ்ரேயாஸ் (கோல்கட்டா), சாம்சன் (ராஜஸ்தான்), மிட்சல் மார்ஷ் (டில்லி) தலா 2 அரைசதம் விளாசினர்.

 

250 

ஐதராபாத் அணியின் வாஷிங்டன் சுந்தரை போல்டாக்கிய மும்பை அணியின் பும்ரா, ‘டி–20’ போட்டிகளில் 250 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். இவர், 205 போட்டிகளில் இந்த இலக்கை அடைந்தார்.

 

900

நேற்று மெரிடித் வீசிய போட்டியின் 12.4 வது பந்தை சிக்சருக்கு அனுப்பினார் ஐதராபாத் வீரர் பூரன். இது 15வது சீசன் ஐ.பி.எல்., தொடரில் அடிக்கப்பட்ட 900 வது சிக்சராக அமைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?