பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் தகுதிச்சுற்றில் ராம்குமார் ராமநாதன் வெற்றி பெற்றார்.
பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் 22ல் பாரிசில் துவங்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் உலக தரவரிசையில் 178 வது இடத்திலுள்ள இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், 114 வது இடத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஹான்ப்மானை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6–3 என கைப்பற்றிய ராம்குமார், அடுத்த செட்டையும் 6–2 என எளிதாக வசப்படுத்தினார். ஒரு மணி நேரம், 10 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் ராம்குமார் 6–3, 6–2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு தகுதி போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், அர்ஜென்டினாவின் கேசினிடம் 2–6, 2–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.