Advertisement


பாட்மின்டனின் 1983 தருணம் * கவாஸ்கர் புகழாரம்

மே 16, 2022 22:37
 Comments  
 


This Could Be The 1983 Moment For Badminton, Sunil Gavaskar India, Thomas Cup Victory
 

புதுடில்லி: ‘‘இந்தியா 1983ல் உலக கோப்பை வென்றது போன்ற தருணம், தற்போது பாட்மின்டனில் ஏற்பட்டுள்ளது,’’ என்றார். 

தாய்லாந்தில் பாட்மின்டன் அணிகளுக்கு இடையிலான உலக சாம்பியன்ஷிப் என்றழைக்கப்படும், தாமஸ் (ஆண்கள்), உபர் கோப்பை (பெண்கள்) பாட்மின்டன் தொடர் நடந்தது. இந்திய வீரர்கள் துவக்கத்தில் இருந்தே அசத்தினர். லீக் சுற்றில் 2 வெற்றி, 1 தோல்வியுடன் காலிறுதிக்கு முன்னேறியது. இதில் மலேசியாவை 3–2 என சாய்த்த இந்தியா, அரையிறுதியில் டென்மார்க்கை 3–2 என வீழ்த்தியது.

பைனலில் இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியா 3–0 என வென்று தாமஸ் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக தங்கம் வென்று வரலாறு படைத்தது. 73 ஆண்டு கால வரலாற்றில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம்.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது:

இந்திய பாட்மின்டன் வீரர்கள் தாமஸ் கோப்பை வென்று வரலாறு படைத்தனர். நடப்பு சாம்பியன், 14 முறை கோப்பை வென்ற வலிமையான இந்தோனேஷியாவை வென்று உலக கோப்பை போன்ற தொடரில் சாதித்துள்ளனர். எனக்கு பாட்மின்டன் மிகவும் பிடிக்கும். கிரிக்கெட், ‘டி–20’, பாட்மின்டன் என இந்த மூன்றில் எதைப் பார்ப்பது என வந்தால், பாட்மின்டனைத் தான் பார்ப்பேன். 

இந்திய அணியின் வெற்றி செய்தியை கேட்டதும் நிலாவில் பறப்பது போல உணர்ந்தேன். இது இந்திய பாட்மின்டனுக்கு மகத்தான நாள். இதை பாட்மின்டனின் ‘1983’ தருணம் எனலாம். ஏனெனில் 1983ல் இந்தியா உலக கோப்பை வெல்லும் என யாரும் நினைத்துக் கூட பார்த்தது இல்லை. 

ஆனால் பாட்மின்டனில் அப்படிக் கூறவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக இந்திய பாட்மின்டன் வியத்தகு வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் 14 முறை கோப்பை வென்ற இந்தோனேஷியாவுடன் பைனல் என்றதால் சற்று சந்தேகம் ஏற்பட்டது. கடைசியில் இந்தியா சாதித்து விட்டது. இதை நினைத்து சூரியன், சந்திரன் (நிலா) மட்டுமல்ல இந்த அனைத்து கிரகங்களின் மீதும் மிதப்பது போல உணர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

தனி விமானம் கிடைக்குமா

உலக சாம்பியன் ஆன இந்திய அணிக்கு ‘ஏர் இந்தியா’ விமான நிறுவனத்தில் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதில் தந்த இந்திய பாட்மின்டன் வீரர் சிராக் ஷெட்டி 23, கூறுகையில்,‘‘அப்படியே நாங்கள் வீடு திரும்ப தனி விமானம் கிடைக்கும் என நம்புகிறோம்,’’ என்றார். 

 

துாக்கம் வரல

தாமஸ் தொடரில் பங்கேற்ற 6 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கூறுகையில்,‘‘அப்படியே துாங்க வேண்டும் போல உள்ளது. ஆனால் உலக சாம்பியன்ஷிப் ஆனதை நினைத்தால் துாக்கமே வரமறுக்கிறது. கடந்த முறை உலக சாம்பியன்ஷிப் தொடரில் சிறப்பாக செயல்பட்டேன். இம்முறை மீண்டும் அசத்தினேன். எது பெரியது என இரண்டையும் ஒப்பிட்டு பார்க்க விரும்பவில்லை. அனைத்து வெற்றிகளுமே முக்கியமானது தான். தாமஸ் தொடரில் சாதித்தது உண்மையில் மிகப்பெரிய வெற்றி,’’ என்றார். 


இது ரகசியம்

இந்திய பாட்மின்டன் அணியில் தரவரிசையில் முன்னணியில் (நம்பர்–9) உள்ளவர் லக்சயா சென் 20. ஐதராபாத்தில் இருந்து பாங்காக் சென்ற போது, மோசமான உணவு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். அடுத்த இரு நாள் மட்டும் ஓய்வில் இருந்த இவர், தொடர் முழுவதும், முழு உடற்தகுதி இல்லாமல் தான் விளையாடினார். இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் விமல் குமார் கூறுகையில்,‘‘அணியின் நலனுக்காக லக்சயா குறித்த விஷயம் வெளியில் தெரியாமல் மிக ரகசியமாக வைத்திருந்தோம்,’’ என்றார்.

 

சாத்விக் ஜோடி விலகல்

தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் இன்று பாங்காக்கில் துவங்குகிறது. இதன் இரட்டையர் பிரிவில் இருந்து உலகின் ‘நம்பர்–8’ இடத்திலுள்ள இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி விலகியது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?