ஷிம்கெண்ட்: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதிச்சுற்றில் அர்ஜுன் காடே, சசிக்குமார் முகுந்த் வெற்றி பெற்றனர்.
கஜகஸ்தானில் ஆண்களுக்கான ஷிம்கெண்ட் சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று முதல் போட்டியில் இந்தியாவின் சசிக்குமார் முகுந்த், உக்ரைனின் மனவோவை எதிர்கொண்டார். இதில் சசிக்குமார் 6–3, 6–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் காடே, கஜகஸ்தானின் லோமகினை சந்தித்தார். சிறப்பாக செயல்பட்ட அர்ஜுன், 6–1, 7–6 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார்.