புதுடில்லி: பெண்களுக்கான ‘டி–20’ சாலஞ்ச் தொடர் வரும் மே 23ல் துவங்கவுள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் 2023 முதல் பெண்களுக்கான ஐ.பி.எல்., தொடர் நடக்கவுள்ளது. இதற்கு முன்னோட்டமாக புனேயில் பெண்களுக்கான ‘டி–20’ சாலஞ்ச் தொடர்(மே 23–28) நடக்க உள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் சூப்பர்நோவாஸ், ஸ்மிருதி மந்தனாவின் டிரையல் பிளேசர்ஸ், தீப்தி சர்மா கேப்டனாக உள்ள வெலாசிட்டி என மூன்று அணிகள் மோதவுள்ளன. ஒவ்வொரு அணியிலும் 16 வீராங்கனைகள் இடம் பெறுவர். இதில் ‘சீனியர்’ வீராங்கனைகள் மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, ஷிகா பாண்டே சேர்க்கப்படவில்லை.
தென் ஆப்ரிக்காவின் லாரா, சுனே லுஸ், உலகின் ‘நம்பர்–1’ பவுலர், இங்கிலாந்தின் சோபி எக்லஸ்டோன், சோபியா, கேட் கிராஸ், தாய்லாந்தின் நத்தகன் சன்டம், ஆஸ்திரேலியாவின் அலானா கிங் என அன்னிய அணிகளில் இருந்து 12 பேர் களமிறங்குகின்றனர்.