ரோம்: இத்தாலி ஓபன் டென்னிசின் அரையிறுதியில் சானியா ஜோடி முன்னேறியது.
இத்தாலியில் ரோம் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் லுாசி ஹிரடெக்கா ஜோடி, சிலியின் அலெக்சா குவாரச்சி, சுலோவேனியாவின் ஆன்ட்ரியா கிளபக் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் சானியா ஜோடி 6–4, 4–6, 10–8 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
ஸ்வியாடெக் அபாரம்
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனை, போலந்தின் ஸ்வியாடெக், கனடாவின் பியான்காவை சந்தித்தார். இதில் ஸ்வியாடெக், 7–6, 6–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். சர்வதேச டென்னிஸ் அரங்கில் ஸ்வியாடெக் பெற்ற தொடர்ச்சியான 26 வது வெற்றி இது.
மற்றொரு காலிறுதியில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் அனிசிமோவாவை 4–6, 6–3, 6–2 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் ஸ்வியாடெக்கை சந்திக்கவுள்ளார்.
ரஷ்யாவின் கசட்கினா, ஸ்பெயினின் பவுலா படோசாவை சந்தித்தார். இதில் படோசா 4–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.