Advertisement


லவ்லினா அதிர்ச்சி தோல்வி * உலக குத்துச்சண்டையில்...

மே 13, 2022 22:27
 Comments  
 


IBA Women World Boxing Championship, Lovlina loses, Pooja won
 

இஸ்தான்புல்: உலக குத்துச்சண்டை தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் லவ்லினா தோல்வியடைந்தார். 

துருக்கியில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 93 நாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 66 கிலோ பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியாவின் லவ்லினா, இங்கிலாந்தின் சிண்டி நிகம்பாவை சந்தித்தார். இதில் லவ்லினா 1–4 என அதிர்ச்சி தோல்வியடைந்தார். 

75 கிலோ பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி, 5–0 என ஹங்கேரியின் டிமியாவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். 54 கிலோ பிரிவு ‘ரவுண்டு–32’ போட்டியில் இந்தியாவின் ஷிக் ஷா, அர்ஜென்டினாவின் ஹெர்ரெராவை சந்தித்தார். 

துல்லியமான குத்துக்களை விட்ட சிக் ஷா 5–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். 

60 கிலோ பிரிவில் இந்தியாவின் ஜாஸ்மின், இருமுறை ‘ஆசிய யூத் சாம்பியன்’ தாய்லாந்தின் பார்ன்டிப்பை சந்தித்தார். முதல் சுற்றில் பின்தங்கிய ஜாஸ்மின், இறுதியில் 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?