Advertisement


ருபிந்தர் சிங் காயம்

மே 13, 2022 21:46
 Comments  
 


Asia Cup Hockey, India Squad, Rupinder Pal Singh, Wrist Injury, Ruled Out
 

பெங்களூரு: மணிக்கட்டு பகுதியில் காயமடைந்த இந்திய கேப்டன் ருபிந்தர் பால் சிங், ஆசிய கோப்பை ஹாக்கியில் இருந்து விலகினார்.

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், வரும் மே 23 முதல் ஜூன் 1 வரை ஆண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, தென் கொரியா, வங்கதேசம், மலேசியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான் (மே 23), ஜப்பான் (மே 24), இந்தோனேஷியா (மே 26) அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.

 

இத்தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் கேப்டனாக ருபிந்தர் பால் சிங், துணை கேப்டனாக பிரேந்திர லக்ரா நியமிக்கப்பட்டனர். பயிற்சியின் போது மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டதால், ஆசிய கோப்பையில் இருந்து ருபிந்தர் சிங் விலகினார்.

 

இதனையடுத்து கேப்டனாக பிரேந்திர லக்ரா, துணை கேப்டனாக எஸ்.வி. சுனில் நியமிக்கப்பட்டனர். ருபிந்தருக்கு மாற்று வீரராக சஞ்ஜீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?