Advertisement


காலிறுதியில் சானியா ஜோடி

மே 12, 2022 21:37
 Comments  
 


Sania Mirza and Lucie Hradecka
 

ரோம்: இத்தாலி ஓபன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் சானியா ஜோடி முன்னேறியது.

இத்தாலியில் ரோம் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் லுாசி ஹிரடெக்கா ஜோடி, கஜகஸ்தானின் ரைபகினா, ரஷ்யாவின் சம்சனோவா ஜோடியை சந்திக்க இருந்தது.

கடைசி நேரத்தில் எதிரணி ஜோடி விலகிக் கொள்ள, சானியா ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, காலிறுதிக்கு முன்னேறியது.

போபண்ணா ஏமாற்றம்

ஆண்கள் இரட்டையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் மிடில்கூப் ஜோடி, நெதர்லாந்தின் வெஸ்லே, பிரிட்டனின் ஸ்குப்ஸ்கி ஜோடியிடம் 6–7, 3–6 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.

காலிறுதியில் சபலென்கா

பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலாவை 6–1, 6–4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசா, பெலாரசின் சஸ்னோவிச்சை 6–2, 6–1 என சாய்த்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?