Advertisement


ஸ்வியாடெக், சபலென்கா அபாரம்

மே 11, 2022 21:51
 Comments  
 


bianca andreescu iga swiatek, italy open tennis
 

ரோம்: இத்தாலி டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்வியாடெக், சபலென்கா முன்னேறினர்.

இத்தாலியில் ரோம் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனை போலந்தின் ஸ்வியாடெக், ருமேனியாவின் ரூசை 6–3, 6–0 என எளிதாக வீழ்த்தினார்.

பெலாரசின் அசரன்கா, கொலம்பியாவின் ஓசோரியோவை சந்தித்தார். இதில் அசரன்கா 6–2, 6–4 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு இரண்டாவது சுற்றில் பெலாரசின் சபலென்கா, 6–2, 6–0 என சீனாவின் சுவாய் பெங்கை சாய்த்தார். அமெரிக்காவின் அனிசிமோவா 7–6, 6–1 என சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக்கை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

மற்ற இரண்டாவது சுற்று போட்டிகளில் கனடாவின் பியான்கா அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, கோகோ காப், கஜகஸ்தானின் ரைபகினா, செக் குடியரசின் பெட்ரா மார்டிச் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?