ஹெலிபுரோன்: ஜெர்மனி சாலஞ்சர் கோப்பை தொடரின் பிரதான சுற்றுக்குள் நுழைந்தார் சுமித் நாகல்.
ஜெர்மனில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு தகுதிச்சுற்று போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல், ஜெர்மனியின் கெல்மை எதிர்கொண்டார்.
இதில் சுமித் நாகல் 6–2, 6–1 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த இரண்டாவது தகுதி போட்டியில் சுமித் நாகல், பிரான்சின் காசியரை சந்தித்தார்.
முதல் செட்டை சுமித் நாகல் 6–4 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் சுமித் நாகல் 2–0 என முன்னிலையில் இருந்த போது காசியர் காயம் காரணமாக விலகிக் கொண்டார். இதையடுத்து சுமித் நாகல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, பிரதான சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சாகேத் மைனேனி, ஜெர்மனியின் ஸ்கொயரின் 2–6, 4–6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.