மான்செஸ்டர்: மாரடோனா ‘ஜெர்சி’, ரூ. 71 கோடிக்கு ஏலம் போனது.
அர்ஜென்டினா கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனா 60. கடந்த 2020 நவ., ல் மறைந்தார். உலக கோப்பை தொடரில் 4 முறை பங்கேற்ற இவர், 1986ல் அர்ஜென்டினா அணிக்கு உலக கோப்பை வென்று தந்தார்.
இத்தொடரின் காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக, தனது இடது கையை பயன்படுத்தி, கோல் அடித்து சர்ச்சை கிளப்பினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘ அது கடவுளின் கை’ என்றார்.
அப்போது மாரடோனா அணிந்திருந்த ‘ஜெர்சி’ இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள தேசிய கால்பந்து மியூசியத்தில் உள்ளது. இது இணையதளம் வழியாக ஏலம் விடப்பட்டது.
அதிகபட்சம் ரூ. 71 கோடிக்கு ஏலம் போனது. வாங்கியவர் விபரம் தெரியவில்லை. விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருள் அதிக தொகைக்கு ஏலம் போனது, இது தான் முதன் முறை. இதற்கு முன் நவீன ஒலிம்பிக் குறித்த அறிக்கை, 2019ல் ரூ. 67 கோடிக்கு ஏலம் போனது தான் அதிகம்.