மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு ஹாலெப், அலெக்சாண்ட்ரோவா முன்னேறினர்.
ஸ்பெயினின் மாட்ரிட்டில் ஆண்கள், பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், அமெரிக்காவின் கோகோ காப்பை சந்தித்தார்.
முதல் செட்டை ஹாலெப் 6–4 என வென்றார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த செட்டையும் 6–4 என கைப்பற்றினார். முடிவில் ஹாலெப் 6–4, 6–4 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரோவா, செக் குடியரசின் புஸ்கோவாவை 6–7, 6–0, 7–5 என்ற செட் கணக்கில் போராடி வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு மூன்றாவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் அனிசிமோவா, பெலாரசின் அசரன்காவை 6–1, 6–4 என சாய்த்தார்.