Advertisement


இங்கிலாந்து பயிற்சியாளரா ரவி சாஸ்திரி * தேடி வருது வாய்ப்பு

ஏப்ரல் 26, 2022 22:06
 Comments  
 


Former India coach Ravi Shastri,
 

லண்டன்: ‘‘இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க ஆர்வமில்லை,’’என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர் ரவி சாஸ்திரி, 59. இவரது ஏழு ஆண்டு கால(2014–21) பயிற்சியில், இந்தியா 14 டெஸ்ட் தொடரில் 10ல் வென்றது. ஆஸ்திரேலிய உள்ளிட்ட அன்னிய மண்ணில் வெற்றி வாகை சூடியது. டெஸ்ட் அரங்கில் ‘நம்பர்–1’ அணியாக முன்னேற்றம் கண்டது. தற்போது மீண்டும் வர்ணனையாளர் பணிக்கு திரும்பியுள்ளார். இவருக்கு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராகும் வாய்ப்புள்ளது. சமீபத்திய ஆஷஸ் டெஸ்ட் தோல்வியை தொடர்ந்து இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கிறிஸ் சில்வர் வுட் விலகினார். இப்பதவிக்கு தென் ஆப்ரிக்காவின் கேரி கிறிஸ்டன், ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர் உட்பட பலரும் போட்டியிடுகின்றனர்.

இது குறித்து ரவி சாஸ்திரி கூறியது:

இங்கிலாந்து மண்ணில் 2014ல் வர்ணனை செய்து கொண்டிருந்த போது திடீரென பி.சி.சி.ஐ.,யிடம் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக பயிற்சியாளர் பதவியை ஏற்கும்படி அறிவுறுத்தினர். ஏழு ஆண்டுகள் பயிற்சியாளராக இருந்துவிட்டேன். முழுநேர பணி போன்றது. ஒரு ஆண்டில் 300 நாட்கள் போட்டி இருக்கும். ஒவ்வொரு நாளும் 140 கோடி இந்திய மக்கள் மதிப்பீடு செய்து கருத்துகளை தெரிவிப்பர். இதனை சமாளிப்பது மிகவும் கடினம். இந்தியா போன்ற நாட்டில் பொறாமை பிடித்த நபர்கள் அதிகம். எப்போதும் நம்மை வீழ்த்த விரும்புவர். இதனை பார்த்து ‘டியூக்’ வகை கிரிக்கெட் பந்துகளின் லெதரைவிட எனது மனம் உறுதியாக மாறி விட்டது. வீண் விமர்சனங்களை கண்டு கலங்க மாட்டேன். இனி பயிற்சியாளர் பாதையில் பயணிக்க வாய்ப்பு இல்லை. இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ஆர்வம் இல்லை.

இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியை ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்சிடம் வழங்கலாம். கேப்டன் பொறுப்பு இவரது ஆட்டத்தை இன்னும் மேம்படுத்தும். அனுபவத்திற்கு நிகர் எதுவுமில்லை. இதனை உணர்ந்து வேகப்பந்துவீச்சாளர்கள் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்டிற்கு  மீண்டும் வாய்ப்பு அளிக்கலாம்.

அன்னிய மண்ணில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்கள் வார்த்தை போரில் ஈடுபடுவது சகஜம். இவர்கள் ஒரு வார்த்தை தவறாக சொன்னால், அதற்கு மூன்று வார்த்தைகளை பதிலடியாக கொடுக்க சொல்வேன். இதில் இரண்டு நமது தாய்மொழியிலும் ஒன்று அவர்களது மொழியிலும் இருக்க வேண்டுமென இந்திய வீரர்களிடம் அறிவுறுத்துவேன்.

இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?