Advertisement


பிரக்ஞானந்தா ஏமாற்றம்

ஏப்ரல் 26, 2022 21:57
 Comments  
 


Oslo Cup chess, Praggnanandhaa
 

ஆஸ்லோ: ஆஸ்லோ கோப்பை செஸ் தொடரின் நான்காவது சுற்றில் கார்ல்சனிடம் வீழ்ந்தார் பிரக்ஞானந்தா.

நார்வேயில் ஆஸ்லோ கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. உலக சாம்பியன் கார்ல்சன், இந்தியாவின் இளம் வீரர் பிரக்ஞானந்தா 16, உட்பட உலகின் 8 முன்னணி வீரர்கள் மோதுகின்றனர். இதன் முதல் மூன்று சுற்றிலும் பெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, நான்காவது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனை சந்தித்தார்.

முதல் போட்டியில் கருப்பு நிறகாய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 76 வது நகர்த்தலில் வீழ்ந்தார். அடுத்த போட்டியில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, 38 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.

அடுத்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பிரக்ஞானந்தா, 35வது நகர்த்தலில் வீழ்ந்தார். முடிவில் பிரக்ஞானந்தா 0–3.0 என்ற கணக்கில் தோற்றார்.

இதுவரை முடிந்த நான்கு சுற்று முடிவில் கார்ல்சன், பிரக்ஞானந்தா தலா 9.0 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். போலந்தின் ஜான் டுடா (7.0), வியட்நாமின் குவாங் லியம் (6.0) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?