Advertisement


கோவா–வடகிழக்கு ‘டிரா’: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ‘விறுவிறு’

ஜனவரி 14, 2022 21:35
 Comments  
 


Indian Super League Soccer, ISL Football, Goa, Northeast United, Draw
 

பம்போலிம்: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் கோவா, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய லீக் போட்டி 1–1 என, ‘டிரா’ ஆனது.

கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து எட்டாவது சீசன் நடக்கிறது. பம்போலிம் நகரில் நடந்த லீக் போட்டியில் கோவா, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் வடகிழக்கு அணியின் ஹெர்னன் சான்டனா ஒரு கோல் அடித்தார். இதற்கு 39வது நிமிடத்தில் கோவா அணியின் ஐரன் கேப்ரேரா ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவு 1–1 என, சமநிலையில் இருந்தது.

 

இரண்டாவது பாதியில் கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என, ‘டிரா’ ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. கோவா அணி, 11 போட்டியில், 3 வெற்றி, 4 ‘டிரா’, 4 தோல்வி என, 13 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு முன்னேறியது. வடகிழக்கு யுனைடெட் அணி, 11 போட்டியில், 2 வெற்றி, 3 ‘டிரா’, 6 தோல்வி என, 9 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?