Advertisement


அரையிறுதியில் சிந்து: இந்திய ஓபன் பாட்மின்டனில்

ஜனவரி 14, 2022 20:49
 Comments  
 


India Open Badminton, Sindhu, Lakshya Sen, Semi Final
 

புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் சிந்து, லக்சயா சென் முன்னேறினர்.

டில்லியில், இந்திய ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, அஷ்மிதா சாலிஹா மோதினர். முதல் செட்டை 21–7 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 21–18 என தன்வசப்படுத்தினார். முடிவில் சிந்து 21–7, 21–18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில், தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்கை எதிர்கொள்கிறார்.

 

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஆகார்ஷி காஷ்யப், மாளவிகா மோதினர். அபாரமாக ஆடிய ஆகார்ஷி 21–12, 21–15 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் தாய்லாந்தின் புசானனை சந்திக்கிறார்.

 

லக்சயா அபாரம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், பிரணாய் மோதினர். முதல் செட்டை பிரணாய் 21–14 எனக் கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட லக்சயா, 2வது செட்டை 21–9 என தன்வசப்படுத்தி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய லக்சயா 21–14 என வென்றார். முடிவில் லக்சயா சென் 14–21, 21–9, 21–14 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

 

ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21–18, 21–18 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூரின் ஹீ யங் கெய் டெர்ரி, லோ கீன் ஜோடியை தோற்கடித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?