Advertisement


பைனலில் பதோசா

ஜனவரி 14, 2022 17:40
 Comments  
 


Paula Badosa, Spain, tennis, sydney
 

சிட்னி: சிட்னி ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு கிரெஜ்ஜிகோவா, பதோசா மோதவுள்ளனர்.  

சிட்னியில் பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செக் குடியரசின் கிரெஜ்ஜிகோவா, எஸ்தோனியாவின் கொன்டாவெயிட்டை சந்தித்தார். இதில் முதல் செட்டை 0–6  என இழந்த கிரெஜ்ஜிகோவா, அடுத்த செட்டை 6–4 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.

வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இதில் கிரெஜ்ஜிகோவா 7–6 என வசப்படுத்தினார். முடிவில் கிரெஜ்ஜிகோவா  0–6, 6–4, 7–6 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் ரஷ்யாவின் கசட்கினா, ஸ்பெயினின் பதோசா  மோதினர். இதில் பதோசா 6–2, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். பைனலில் கிரெஜ்ஜிகோவா, பதோசா மோதவுள்ளனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?