Advertisement


ஜோகோவிச் விசா மீண்டும் ரத்து *கலையும் ஆஸி., ஓபன் கனவு

ஜனவரி 14, 2022 17:32
 Comments  
 


Australian Open, Novak Djokovic visa cancelled for the second time
 

மெல்போர்ன்: ஜோகோவிச் விசா மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய  ஓபன் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் 17–30ல் மெல்போர்னில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இத்தொடரில் 9 முறை கோப்பை வென்ற, உலகின் ‘நம்பர்–1’ வீரர், செர்பியாவின் ஜோகோவிச், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. இதனால் மெல்போர்ன் சென்ற இவரது விசா ரத்து செய்யப்பட்டது.குடியேற்றத்துறை அதிகாரிகள் சார்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதை எதிர்த்து நடந்த வழக்கில் ஜோகோவிச் சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜோகோவிச், மெல்போர்ன் மைதானத்தில் பயிற்சியை துவங்கினார். அதேநேரம் குடியேற்றத்துறை விதிகளின் படி, அமைச்சர் அலெக்ஸ் ஹாகே, ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்ய முடியும் என கூறப்பட்டது.

தவிர போட்டி துவங்கும் சில நாட்களுக்கு முன் இப்படிச் செய்து, ஜோகோவிச்சை வெளியேற்ற முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது இது உண்மையானது. கோர்ட் அனுமதி வழங்கிய 4 நாள் கழித்து, நேற்று ஜோகோவிச் விசா மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து அலெக்ஸ் ஹாகே கூறுகையில்,‘‘பொது மக்களின் நலன் கருதி, எனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச் விசாவை ரத்து செய்துள்ளேன்,’’ என்றார்.

மீண்டும் அப்பீல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் அடுத்த இரு நாளில் துவங்கவுள்ளது. இதனால் ஜோகோவிச் விசா மீண்டும் ரத்தானதை எதிர்த்து அவரது வக்கீல்கள் நேற்று உடனடியாக அப்பீல் செய்தனர். இதை விசாரித்த கோர்ட், இரு தரப்பிலும் போதிய ஆதாரங்களை வழங்க கால அவகாசம் கொடுத்து, வழக்கை ஒத்தி வைத்தது. நாளை மீண்டும் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. இதனிடையே இன்று காலை ஆஸ்திரேலிய அதிகாரிகளால் வக்கீல் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் ஜோகோவிச், மதியம் முதல், வழக்கு முடியும் வரை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்கப்பட உள்ளார். இதனால் ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகமாகி உள்ளது. 

 

மூன்று ஆண்டு தடை

கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 20 கோப்பை வென்றவர் ஜோகோவிச் 34. ஆஸ்திரேலிய ஓபனில் மட்டும் ‘ஹாட்ரிக்’ (2019, 2020, 2021) உட்பட 9 முறை கோப்பை வென்றுள்ளார். இம்முறை சாதித்து 10வது, 21 கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றவர் என சாதிக்க காத்திருந்தார். ஆனால் ஆஸ்திரேலிய விதிப்படி இரண்டாவது முறையாக விசா ரத்து செய்யப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுக்கு இங்கு நுழைய முடியாது. தவிர சட்ட விதிகள் தெளிவாக இருப்பதால் வழக்கில் ஜோகோவிச் வெற்றி பெறுவது சிரமமே. இதனால் விரைவில் நாடு திரும்பலாம். ஆஸ்திரேலிய ஓபனில் மீண்டும் சாதிப்பது கனவாக மாறலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?