Advertisement


சென்னை–ஐதராபாத் ‘டிரா’: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் ‘விறுவிறு’

ஜனவரி 13, 2022 22:23
 Comments  
 


Indian Super League Soccer, ISL Football, Chennai, Hyderabad, Draw
 

படோர்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதிய லீக் போட்டி 1–1 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது.

கோவாவில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து எட்டாவது சீசன் நடக்கிறது. படோர்டாவில் நடந்த லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதின. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் சென்னை கேப்டன் அனிருத் தபா துாக்கி அடித்த பந்தை முகமது சாஜித் தோட் தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். இதற்கு ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45+4வது நிமிடம்) ஐதராபாத் அணியின் ஜாவி சிவேரியோ ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். இவர், சகவீரர் ஆசிஷ் ராய் துாக்கி அடித்த பந்தை தலையால் முட்டி கோலாக்கினார். முதல் பாதி முடிவு 1–1 என, சமநிலையில் இருந்தது.

 

இரண்டாவது பாதியின் கடைசி நிமிடம் வரை போராடிய இரு அணி வீரர்களால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1–1 என, ‘டிரா’ ஆனது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. சென்னை அணி, 11 போட்டியில், 4 வெற்றி, 3 ‘டிரா’, 4 தோல்வி என, 15 புள்ளிகளுடன் 6வது இடத்தில் நீடிக்கிறது. ஐ தராபாத் அணி 11 போட்டியில், 4 வெற்றி, 5 ‘டிரா’, 2 தோல்வி என, 17 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?